அதிமுகவினர் ஊடகங்கள், பத்திரிகைகளில் பேட்டி அளிக்கக்கூடாது!

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2019 06:58 pm
admk-persons-will-not-give-press-meet-until-the-next-announcement

கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை கழகத்தின் செய்தித் தொடர்பாளர்கள், நிர்வாகிகள் யாரும் ஊடகத்திலோ, பத்திரிக்கையிலோ கருத்துக்களை கூற வேண்டாம் என்று அதிமுக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக அதிமுகவில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அடுத்த கட்ட அரசியல் பணிகள் நடைபெற்று வருவதால், கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை, கழகத்தின் செய்தித் தொடர்பாளர்கள், நிர்வாகிகள் யாரும் ஊடகத்திலோ, பத்திரிக்கையிலோ கருத்துக்களை கூற வேண்டாம். அவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close