தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2019 10:21 am
tn-assembly-session-starts-today

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிப்பு நடைபெற்றது. மேலும், சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரங்கல் வாசிப்புக்கு பெற்ற சட்டப்பேரவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர், சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் ஜூலை 1-ஆம் தேதி திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடும் என சபாநாயகர் அறிவித்தார். 

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்திற்குப் பிறகு திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தனித்தனியே அந்தந்த கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close