எங்களுக்குள் இருந்தது அண்ணன் - தம்பி பிரச்னை தான்: எம்.எல்.ஏ கலைச்செல்வன்!

  முத்துமாரி   | Last Modified : 03 Jul, 2019 05:06 pm
mla-kalaichelvan-press-meet-after-he-meets-cm

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும், அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ கலைச்செல்வன், தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து பேசினார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டி.டி.வி தினகரன் எதேச்சதிகாரமாக செயல்பட்டு வருகிறார். அதிமுகவை கலைக்க வேண்டும் என்று அவர் கூறியதை எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல்களில் டிடிவி தினகரனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டார்கள்.

ஆட்சி கலைப்புக்கு யாரும் உடன்படமாட்டார்கள்; முதல்வர் பழனிசாமி சொல்வதை கேட்டு செயல்படுவோம். அதிமுக தலைமை மீது யாருக்கும் கோபமில்லை; எங்களுக்குள் இருந்தது அண்ணன்-தம்பி பிரச்னை தான். 

அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் திமுகவுக்கு செல்வதாக வரும் செய்திகள் வதந்திகள் தான். அது உண்மையல்ல.  அதிமுகவுக்கு நாங்கள் எப்போதும் விசுவாசமாக இருப்போம்" என்று கருத்து  தெரிவித்துள்ளார். 

newstm.in

முதல்வருடன் விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் சந்திப்பு!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close