ரூ. 318 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் - முதல்வர் அறிவிப்பு!

  முத்துமாரி   | Last Modified : 10 Jul, 2019 01:06 pm
cm-edappadi-palanisamy-announcement-for-building-dams

தமிழகத்தில் ரூ. 318 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் புதிதாக கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக மக்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

அதன்படி, தண்ணீரை சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்துவதற்காக தமிழகத்தில் ரூ. 318 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் புதிதாக கட்டப்படும் என அறிவித்துள்ளார்.  அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

தமிழகத்தில் எதிர்வரும் காலங்களில் தண்ணீர் பிரச்னையை சரிசெய்யும் பொருட்டு தடுப்பணைகள் காட்டப்படுகிறது என்றும் தெரிவித்தார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close