ரஜினி ஆட்சியை பிடிப்பாரா? பிரபல ஜோதிடர் கணிப்பு!

  அனிதா   | Last Modified : 12 Dec, 2019 11:45 am
vijay-does-not-come-into-politics-ajith-will-not-welcome-rajinikanth

விஜய் தற்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார், அஜித் அரசியலுக்கு வரவே மாட்டார், அரசியலில் வரவிருக்கும் ரஜினிக்கு மக்களின் ஆதரவு இருக்காது என்று உலகக் கோப்பை புகழ் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் தெரிவித்துள்ளார்.

யார் இந்த பாலாஜிஹாசன்?

சேலம் மாவட்டம் செவ்வாய் பேட்டையைச் சேர்ந்தவர் இளம்வயது ஜோதிடர் பாலாஜிஹாசன். இவர், 2019 உலகக்கோப்பையில் அரைஇறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளை 3 மாதங்களுக்கு முன்பே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் என்றும், அதில் நியூசிலாந்து வெற்றி அடைய வாய்ப்புள்ளது என்றும் கணித்து கூறியிருந்தார். பாலாஜிஹாசன் கணித்தது போலவே அரையிறுதிக்கு இந்தியா - நியூசிலாந்து தகுதிபெற்று, அப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி அடைந்தது.


இதையடுத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாலாஜிஹாசன் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இவரது கணிப்பை பாராட்டி, நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் ட்விட்டரில் பாலாஜிஹாசன் குறித்து பேச, ஒரே நாளில் பிரபலமடைந்தார்.

 

விஜய், அஜித் அரசியலுக்கு வரமாட்டார்கள், ரஜினிக்கு அரசியலில் மக்களின் ஆதரவு இருக்காது

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி பாலாஜிஹாசனிடம் பேட்டி எடுத்த போது, அவரிடம் விஜய், அஜித், ரஜினி அரசியலுக்கு வருவார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘விஜய் தற்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார். அஜித் அரசியலுக்கு வரவே மாட்டார்.அரசியலில் வரவிருக்கும் ரஜினிக்கு மக்களின் ஆதரவு இருக்காது’ என்று தெரிவித்தார்.

மேலும்,  ‘பிகில்’ திரைப்படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்றும், துப்பாக்கி படம் போலவே இப்படம் விஜய்க்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்றும் பாலாஜிஹாசன் கூறியுள்ளார். இதையடுத்து, இவர் பேசிய இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ரஜினியின் பிறந்தநாளான இன்று, பாலாஜிஹாசனின் இந்த வீடியோவை அரசியல் கட்சியினர் பரப்பி வருகின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close