வேலூர் தேர்தல்: அதிமுக பொறுப்பாளர்களாக 209 பேர் நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2019 10:31 am
vellore-election-admk-starts-work-on-july-22

வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் மொத்தம் 209 பேர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, திமுக 70க்கும் மேற்பட்டோரை தேர்தல் பொறுப்பாளராக அறிவித்துள்ளது. தற்போது அதிமுக, திமுகவை விட இரண்டு மடங்கு கூடுதலாக மொத்தம் 2509 பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. 

வருகிற 22ம் தேதி காலை 10 மணி முதல் முழுவீச்சில் தேர்தல் பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் எம்.எல்.ஏ ரவியின் மேற்பார்வையில் தேர்தல் பொறுப்பாளர்கள் செயல்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close