டாக்டர் ராமதாஸுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் வாழ்த்து!

  Newstm Desk   | Last Modified : 25 Jul, 2019 01:19 pm
cm-edappadi-palanisamy-wishes-doctor-ramadoss

இன்று பிறந்தநாள் காணும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு இன்று 80வது பிறந்தநாள். கட்சியின் தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் டாக்டர் ராமதாஸுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பொது வாழ்வில் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கும் தாங்கள் நல்ல உடல் நலத்துடன், பல்லாண்டு காலம் நீடுடி வாழ இறைவனை வேண்டுவதாக டாக்டர் ராமதாஸின் பிறந்தநாள் வாழ்த்து குறித்து முதலமைச்சர் செய்தி வெளியிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close