தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது: கனிமொழி

  அனிதா   | Last Modified : 27 Jul, 2019 10:35 am
unsafe-environment-for-women-in-tamil-nadu-kanimozhi

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாது சூழல் உள்ளதாக தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்," தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என தெரிவித்தார். நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலைவழக்கில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த கனிமொழி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என கூறினார். 

மேலும், நாடாளுன்ற நிலைக்குழுக்கள் கருத்தை கேட்காமல் மக்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாகவும், இது மோசமான செயல் எனவும் கனிமொழி குற்றம்சாட்டினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close