தமிழகத்தில் 287 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு: ஜெயக்குமார்

  அனிதா   | Last Modified : 27 Jul, 2019 01:13 pm
gst-tax-reduced-for-287-commodities-in-tamil-nadu-jayakumar

தமிழகத்தில் இதுவரை 287 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் 36வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் இதுவரை 287 பொருட்கள் மற்றும் 37 சேவைகள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 69 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், மின்சார காருக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும். இந்த வரி குறைப்பு வரும் ஆக.1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் கூறினார். 

தமிழுக்கு எதிரான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் வெவ்வேறு கொள்கைகள் உள்ளது எனவும் குறிப்பிட்ட அவர் திமுகவை போல் கொள்கைகளை அடமானம் வைக்கவில்லை என விமர்சித்தார். 

மைத்ரேயன் கண்ணீர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், வாய்ப்பு கிடைக்காத போது அழக்கூடாது என்றும், அரசியலில் ஏற்றத்தாழ்வு சகஜம் எனவும் கூறினார். மேலும், முந்தைய காலங்களில் எனக்கு கூட சீட் மறுக்கப்பட்டது.  அப்போது நான் அழுதேனா? அதை பொருட்படுத்தாமல் கட்சிக்காக உழைத்தேன். என்னுடைய உழைப்பை கண்டு முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் வாய்ப்பளித்தார். பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close