'என் கனவு நனவாகப்போகிறது’: ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 28 Jul, 2019 08:17 pm
my-dream-of-becoming-a-ruler-comes-true-stalin

திமுக ஆட்சி அமையும் என்ற கனவு நனவாகப்போகிறது என்றும், ஆட்சியை தக்க வைப்பதில் குறியாக இருக்கும் அதிமுக அரசுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை என்றும், வேலூர் வெள்ளக்குட்டையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜெயக்குமாரின் மகன், மதுரையில் ராஜன் செல்லப்பாவின் மகன் போட்டியிடவில்லையா? எனக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், மக்களின் ஆதரவுடன், அவர்களின் நம்பிக்கையை பெற்றே வாரிசுகள் பொறுப்புக்கு வந்தனர் என்றார்.

மேலும்,‘தேனியில் வெற்றி பெற அதிமுக தந்தது திருநெல்வேலி அல்வாவா? அல்லது டெல்லி அல்வாவா?. 8 வழிச்சாலை வளர்ச்சிக்கு தேவைதான்; ஆனால் அது மக்களை பாதிக்கக்கூடாது. மக்களிடம் கலந்து பேசி திட்டத்தை கொண்டு வர வேண்டும்’ என்றார் ஸ்டாலின்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close