தீய சக்திகளின் கையாளாக பா.ரஞ்சித் செயல்படுகிறாரா?: ஹெச்.ராஜா சந்தேகம்

  Newstm Desk   | Last Modified : 28 Jul, 2019 09:50 pm
pa-ranjith-acts-as-a-manipulator-of-evil-forces-h-raja

எஸ்ரா.சற்குணம், மோகன்.சி.லாசர்ஸ் உள்ளிட்ட மதமாற்றும் தீய சக்திகளின் கையாளாக இயக்குநர் பா.ரஞ்சித் செயல்படுகிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது என்று, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது தெரிவித்தார்.

பா.ரஞ்சித் எந்தவித ஆதாரமும் இல்லாமல் சாதிய மோதலை ஏற்படுத்த வேண்டும் என பேசி வருகிறார் என்ற அவர், ரஞ்சித்தின் படங்களை மக்கள் புறக்கணித்து அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், ‘மலைவாழ், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பவர்கள் மலைவாழ் மக்கள், கிராம மக்கள், கல்வி அறிவு பெறுவதை எதிர்ப்பவர்கள்’ என்றார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close