அதிமுக இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது: டிடிவி.தினகரன்!

  அனிதா   | Last Modified : 29 Jul, 2019 03:52 pm
the-aiadmk-has-a-dual-stand-ttv-dhinakaran

முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை நிலைப்பாடு தெரிய வந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினரன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு உள்ளதா, இல்லையா என்பதை சிறுபான்மையினர் தான் கூற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு சார்பில் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்படும் நிதிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவது தமிழக அரசின் கையாளாகாத தனத்தை காட்டுவதாகவும், வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறினார்.

சிலை கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுவது தொடர்பான கேள்விக்கு அதை பொறுத்திருந்து பார்ப்போம் என பதிலளித்தார். முத்தலாக் மசோதாவில் அதிமுக லோக்சபாவில் ஒரு நிலைப்பாடும், ராஜ்யசபாவில் ஒரு நிலைப்பாடும் எடுத்து இருப்பது அதிமுகவின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது" என தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close