மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெ., மறைவுக்கு பின், எம்.ஜி.ஆர்.,அம்மா தீபா பேரவை என்ற பெயரில் அரசியல் இயக்கம் துவங்கினார்.
தேர்தல்களில் தங்கள் இயக்கம் தனித்து போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். ஜெ.,வின் முகச்சாயல் இருந்ததால் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கும் என் அவரது ஆதரவாளர்கள் சிலர் எதிர்பார்த்தனர்.
எனினும், சொந்த பிரச்னைகள், குடும்ப சூழல் காரணமாக அவரால் அரசியலில் தொடர்ந்து இயங்க முடியவில்லை. இந்நிலையில், தான் அரசியலில் இருந்து முழுவதும் விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் செய்தி பதிவிட்டிருந்தார். எனினும் சில நிமிடங்களில் அந்தப்பதிவும் நீக்கப்பட்டதால் அவரது முடிவில் குழப்பம் நீடிக்கிறது.
newstm.in