‘சதுரங்கவேட்டை’ படம் போல் பேசும் ஸ்டாலின், சொல்வது முழுக்க முழுக்க பொய்: முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2019 07:15 pm
stalin-speaking-like-a-sathurangavettai-movie-is-completely-lying

வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்ட விவகாரம் பற்றி ஸ்டாலின் பேசுவது முழுக்க முழுக்க பொய் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேலூர் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேசிய முதல்வர் பழனிசாமி, ‘ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட கட்சி திமுகதான் என்பதை மக்கள் எப்போதும் மறந்துவிடக்கூடாது. வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்ட விவகாரம் பற்றி ஸ்டாலின் பேசுவது முழுக்க முழுக்க பொய். தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு முழுக் காரணம் திமுகதான். வேலூரில் கைப்பற்றப்பட்ட ரூ.10 கோடி ஊழல் பணம் தொடர்பாக வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.

வாரிசு அரசியல் கூடாது என்றுதான் சொல்கிறோம்; வாரிசுகள் போட்டியிடுவதை குறை கூறவில்லை என்ற முதல்வர், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் சும்மா உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், ‘நெல்லை கொலை வழக்கில் இரண்டே நாளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக ஒழுங்காக இருந்தால் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறாது. சதுரங்கவேட்டை திரைப்படத்தின் நாயகன் போல் ஆசை வார்த்தைகளை ஸ்டாலின் கூறிவருகிறார். அரசியலுக்கு வருவதற்காக தான் உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் நடித்துள்ளார். இல்லையென்றால் அவரை மக்களுக்கு எப்படி தெரியும்?’ என்றும் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close