திமுகவின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது: ஸ்டாலின்!

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2019 06:32 pm
no-horn-can-prevent-dmk-s-victory-stalin

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னைகளுக்கு திமுக குரல் கொடுத்து வருகிறது என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர் உமராபாத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய ஸ்டாலின், ‘பிரச்னை என்றதும் ஓடோடிவருவது திமுக. கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களின் பிரச்னைக்காக குரல் கொடுத்து வருகிறோம். பொய் வழக்கு போட்டு தேர்தலை நிறுத்திவிட்டனர். ரெய்டு என்ற பெயரில் நாடகத்தை நடத்தி ஏப்ரலில் நடக்க வேண்டிய தேர்தல் ரத்து செய்தனர். வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது’ என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close