வேலூரில் திமுக கூட்டணி தலைவர்கள் பிரச்சாரம்

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2019 07:04 pm
dmk-alliance-leader-campaigns-in-vellore

வேலூரில் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் ஸ்டாலின், துரைமுருகன், கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன் முத்தரசன் உள்ளிட்டோர் இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

பிரச்சாரக் கூட்டத்தில், தன்னை விவசாயி எனக் கூறும் முதல்வர் விவசாயிகள் பாதிப்பு குறித்து அக்கறப்படவில்லை என்று முத்தரசனும், பாஜக அரசு பாடம் கற்கும் வகையில் வேலூர் மக்கள் திமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் வைகோவும் பேசினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் பலவிவாதங்களில் அதிமுக எம்பிக்கள் பங்கேற்பதில்லை என்று மார்க்சிஸ்ட் டி.கே.ரங்கராஜனும், கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பியுள்ளார் என்று திருமாவளவனும் பேசியுள்ளனர்.

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close