ஜெயலலிதா தைரியமானவர், ஓபிஎஸ் மீது எனக்கு மரியாதை உண்டு: ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2019 07:28 pm
jayalalitha-is-brave-and-i-have-respect-for-ops-stalin

‘ஜெயலலிதா மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவர் தைரியமானவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய முடியவில்லை’ என்று, வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின் இவ்வாறு பேசினார். 

நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பியதை சட்டப்பேரவைக்கு கூறவில்லை என்றும், நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் தற்கொலை தொடர்கிறது என்றும் ஸ்டாலின் கூறினார்.

மேலும், ‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது கருணாநிதிக்கும், எனக்கும் மிகுந்த மரியாதை இருந்தது. என்னை பார்த்து சிரித்ததால் தனது முதல்வர் பதவியை இழந்தார் ஓபிஎஸ். அப்துல் கலாம் குறித்து கருணாநிதி பேசியதாக தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார் ஓபிஎஸ். அப்துல் கலாமை கொச்சைப்படுத்தும் வகையில் ஓபிஎஸ் பேசியது கண்டிக்கத்தக்கது. வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது; எத்தனை லட்சம் வாக்குகள் என்பதைதான் உறுதி செய்ய வேண்டும்’ என்றார் ஸ்டாலின்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close