நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது?

  Newstm Desk   | Last Modified : 04 Aug, 2019 11:48 am
tn-by-election-date-will-be-released-soon

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு செப்டம்பர் மாதம் இடைத்தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி, கன்னியாகுமரி மாவட்டம் நாங்குநேரி தொகுதி ஆகிய இரு சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நாளை(ஆகஸ்ட் 5) நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 9ம் தேதி நடைபெறுகிறது. இதன் பின்னர், நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் காலமானார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் வெற்றி பெற்றதால், அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக இந்த இரு தொகுதிகளும் காலியாக உள்ளது. 

இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close