ராகுல் காந்தியின் தாய்மாமன் யார்? - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 04 Aug, 2019 04:54 pm
rajendra-balaji-speaks-about-rahul-gandhi-issue

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவருடைய தாய் மாமன்யார், அவரின் பெயர் என்ன, அவர் எங்கு வசித்து வருகிறார் என்பதை வெளிப்படையாகக் கூறி முடியுமா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "காங்கிரஸ் கட்சியின் தலைவராகவோ அல்லது பிரதமர் வேட்பாளராகவோ ராகுல் காந்தியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

உதாரணமாக நம் கலாசாரத்தில் தாய்க்கு அடுத்தது தாய்மாமன் தான் முக்கிய இடம் வகித்து வருகிறார். அது நம் கலாசாரத்தின் மாண்பு. நீங்கள் என்னை கேட்டீர்கள் என்றால் என் தாய்மாமா விருதுநகரில் இருப்பதை என்னால் கூற முடியும். முதலில் ராகுலால் அவரின் தாய் மாமன் யார், அவரின் பெயர் என்ன, எங்கு வசித்து வருகிறார் என்று கூற முடியுமா என்று கேட்டால் அவரால் கூற முடியாது. ஏனெனில் அவர் இத்தாலியில் இருக்கிறார். அதைச்சொல்லிவிட்டால் அவரை மக்கள் ஏற்பார்களா. நிச்சயம் ஏற்க மாட்டார்கள். எனவேதான் ராகுல் அவருடைய தாயார் தொடர்பான உறவினர்கள் குறித்து நம்மிடையே எவ்வித தகவல்களையும் பகிர்ந்து கொள்வது இல்லை. 

மேலும்தற்போதைய காங்கிரஸ் , 'இந்திய தேசிய காங்கிரஸ்' அல்ல. 'இத்தாலி காங்கிரஸ்'. ராகுல் காந்தியின் தாய்மாமன் யார்? சோனியா காந்தியின் அண்ணன், தம்பி எங்கு இருக்கிறார்கள்? அப்படி இருக்கும் போது, அது 'இத்தாலி காங்கிரஸ்' ஆகத் தானே இருக்க முடியும். இந்தியர் அல்லாத ஒருவரை எப்படி நம் நாட்டு மக்கள் தலைவராக ஏற்றுக்கொள்வார்கள்?" என்று  அதிரடியாகப் பேசி காங்கிரஸ் கூடாரத்தை கலங்கச் செய்துள்ளார் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்றால் அது மிகையல்ல. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close