‘முதுகெலும்பில்லாமல் உரிமையை திமுக தாரை வார்த்தது’

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2019 07:32 pm
the-right-wingers-are-dmk

முதுகெலும்பில்லாமல் உரிமையை தாரை வார்த்தவர்கள் எங்களை பார்த்து முதுகெலும்பில்லை என கூறுகிறார்கள் என்று, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு செய்யப்பட்டது தொடர்பாக அளித்த பேட்டியின்போது, திமுகவை சாடியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

அவரது பேட்டியில் மேலும், ‘கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்க காரணமாக இருந்தவர் கருணாநிதிதான். மனிதனுக்கு தலை எவ்வளவு முக்கியமோ, அதே போல இந்தியாவிற்கு காஷ்மீரும் முக்கியம். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் ஜெயலலிதா அன்று சொன்னது இன்று நிறைவேறியுள்ளது’ என்றார்.

மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்பு எங்கு நடந்தாலும் அரசுக்கு தகவல் கொடுங்கள்; கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close