'ஆயிரம் ஆண்டுகள் சாதனையை 100 ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டியவர் கருணாநிதி'

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2019 09:44 pm
karunanidhi-is-the-100-year-old-who-has-set-a-thousand-year-record

கருணாநிதி தற்போது இன்னும் அதிகம் தேவைப்படுகிறார் என்று, சென்னையில் நடைபெற்ற கருணாநிதி நினைவு தின பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ‘ஆயிரம் ஆண்டுகள் சாதனையை 100 ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டியவர் கருணாநிதி. கருணாநிதியின் சிலை சமூக நீதியையும், மாநில சுயாட்சியையும் எடுத்துரைக்கிறது. சமூகநீதி, மாநில சுயாட்சிக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு என்பது மத்தியப்படுத்தப்பட்ட அரசாக மாறிக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தை திமுக எம்பிக்கள் நடு நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேச பக்தி பாடத்தை யாரும் எங்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு. காஷ்மீரில் மீண்டும் கறுப்பு வரலாற்றை உருவாக்க பாஜக அரசு முயற்சிக்கிறது’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close