தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் மணிகண்டன் விடுவிப்பு: முதல்வர் பழனிசாமியின் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2019 10:21 pm
manikandan-release-from-the-minister-of-state-in-the-cabinet-cm-palanicami-action

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை விடுவித்து ஆளுநர் பன்வாரி லால் ரோகித் உத்தரவிட்டுள்ளார். மேலும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்து பேட்டி அளித்திருந்த நிலையில் மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளார். முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் முதன்முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close