இனத் துரோகி காங்கிரஸ் தயவால் நான் எம்.பி., ஆகவில்லை: வைகோ

  Newstm Desk   | Last Modified : 08 Aug, 2019 05:04 pm
vaiko-reaction-on-congress-about-kashmir-issue

'ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்தபோது ஓர் இனத்தையே அழித்தது காங்கிரஸ். அந்த கட்சியின் தயவில் நான் ஒருபோதும் பதவிக்கு வரமாட்டேன்' என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். 

காஷ்மீர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் வைகோ பேசியபோது, காஷ்மீர் பிரச்னைக்கு முக்கிய காரணமே காங்கிரஸ் தான் என ஆவேசமாக பேசினார். அவரின் இந்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தயவில் எம்பி ஆகிவிட்டது அவர் நன்றி மறந்து பேசுவது சரியல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கு பதில் அளித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ''நான் திமுக ஆதரவில்தான் எம்பி ஆனேன். காங்கிரஸ் தயவில் ஒருபோதும் பதவி பெற மாட்டேன். அவர்களுக்கும் நான் எம்பி ஆனதற்கு எந்த தொடர்பும் கிடையாது. அவர்கள் ஒரு இனத்தையே அளித்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதுதான் உண்மையும் கூட'' என அவர் கூறினார். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close