வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகசுந்தரம் கதிர் ஆனந்திடம் வழங்கினார்.
வேலூர் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளார் ஏ.சி.சண்முகத்தை 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் தோற்கடித்தார். கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும் பெற்றனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபலெட்சுமி 26,995 வாக்குகள் பெற்றார்; நோட்டவுக்கு 9,417 வாக்குகள் கிடைத்துள்ளன.
வேலூர் வெற்றியால் மக்களவையில் திமுக எம்பிக்களின் பலம் 24 ஆகவும், தமிழகத்தில் திமுக கூட்டணி எம்பிக்களின் எண்ணிக்கை 38 ஆகவும் உயர்ந்துள்ளது.
newstm.in