காஷ்மீர் விவகாரம்: திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

  Newstm Desk   | Last Modified : 11 Aug, 2019 10:21 am
kashmir-issue-resolutions-taken-in-dmk-meeting

காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தினை நிறுத்திவைக்க வேண்டும் என திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டது குறித்து சென்னையில் திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில்,  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது. காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்தை மத்திய அரசு செய்து சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அனைத்துக்கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவொன்றை காஷ்மீருக்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close