தமிழில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்: அமித் ஷா!

  Newstm Desk   | Last Modified : 11 Aug, 2019 12:41 pm
home-minister-amit-shah-s-speech-in-chennai-function

சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய 'லிசனிங், லேர்னிங், லீடிங்' என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், அரசியல் பிரமுகர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். 

புத்தகத்தை வெளியிட்டு விழாவில் பேசிய அமைச்சர் அமித் ஷா, "நான் இந்த விழாவில் தமிழில் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், முடியவில்லை. தமிழ் பேசுவதற்கு கற்றுக் கொண்டிருக்கிறேன். நிறைய பணிகள் இருப்பதால் தமிழில் கற்றுக்கொள்ள நேரம் ஒதுக்க முடியவில்லை. ஆனால் சென்னையில் கண்டிப்பாக தமிழில் பேசுவேன். அதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறேன். இவ்விழாவில் தமிழில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close