கேரள மக்களுக்கு உதவிட வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்

  Newstm Desk   | Last Modified : 12 Aug, 2019 09:13 pm
want-to-help-the-people-of-kerala-stalin-s-request

கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின், ‘மழை, வெள்ளத்தால் கேரள மக்கள் மீண்டும் பேரிடருக்கு உள்ளாகியுள்ளது இதயத்தை கனக்க வைக்கிறது. கேரள அரசு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டாலும், அம்மாநில மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் பொருட்டு, அண்டை மாநிலங்களும் உதவ வேண்டும். அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close