மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேட முயற்சிக்கிறார்: முதலமைச்சர்!

  அனிதா   | Last Modified : 13 Aug, 2019 03:07 pm
mk-stalin-tries-to-search-for-advertisement-chief-minister

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விளம்பரம் தேட தவறான கருத்தை கூறுவதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.  

சேலம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட முதலமைச்சர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நீலகிரி மாவட்டத்திற்கு அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை என மு.க.ஸ்டாலின் கூறுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர், எதிர்கட்சிதலைவர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேட தவறான கருத்தை சொல்லுவதாகவும், போர்க்கால அடிப்படையில் நீலகிரியில் அனைத்து சீரமைப்பு மற்றும் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். 

மத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கினால் அதிமுக கைகட்டி, தலைவணங்கி நிற்கும்’ என ப.சிதம்பரம் கூறியது பற்றிய செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், " ப.சிதம்பரம் எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தபோது, தமிழகத்திற்கு என்ன திட்டம் கொண்டு வந்தார் என கேள்வி எழுப்பினார். மேலும்,  பூமிக்கு தான் அவர் பாரமாக உள்ளதாகவும்,  அவர் எந்த பிரச்சனையையும் தீர்க்கவில்லை. என்றும் கூறினார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close