‘ஸ்டாலின் போல போஸ் கொடுக்க நா இங்கு வரல’

  Newstm Desk   | Last Modified : 13 Aug, 2019 09:43 pm
i-am-did-not-come-to-pose-as-stalin-ops

மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ளேன்; ஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை என்று, நீலகிரி மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட துணை முதல்வர் பன்னீர்செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ‘துரித நடவடிக்கை தேவை என எதிர்க்கட்சி தலைவர் பேச வேண்டும்; பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது. நீலகிரியில் மழை, வெள்ளத்தால் ரூ.199.21 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மத்தியக் குழுவை அனுப்பி நீலகிரியில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் விளைநிலங்களில் பாதிப்புகளை சரி செய்ய ரூ.4.37 கோடி ஒதுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 1,350 வீடுகள் சேதமடைந்துள்ளன. முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு பதில் மாற்று வீடுகள் கட்டித் தரப்படும்’ என்றும்  துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close