வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு: ராமதாஸ் வரவேற்பு

  Newstm Desk   | Last Modified : 15 Aug, 2019 11:00 am
vellore-district-divided-into-3-welcome-to-ramadas

வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, வேலூர் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படும் என்று அறிவித்தார். திருப்பத்தூர், ராணிப்பேட்டை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், ’வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து ரானிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது’ என்றார்.

மேலும், வேலூரை தொடர்ந்து தமிழகத்தின் பிற பெரிய மாவட்டங்களையும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close