இந்து மத உணர்வுகளை காயப்படுத்திய அதிகாரி: ஹெ.எச்.ராஜா

  Newstm Desk   | Last Modified : 16 Aug, 2019 10:47 am
officer-who-hurt-hindu-sentiment-h-raja

இந்து மத உணர்வுகளை காயப்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பள்ளி மாணவர்கள் சாதியைக் குறிக்கும் வண்ண கயிறு கட்டியது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெ.ச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் இந்துமத நம்பிக்கை சார்ந்த கயிறு கட்ட தடையில்லை என அமைச்சர் கூறியுள்ளார் என தெரிவித்த ஹெ.ச்.ராஜா, அமைச்சரை கலந்தாலோசிக்காமல் சுற்றறிக்கை அனுப்பிய பள்ளி கல்வி இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக பள்ளி மாணவர்கள் சாதியை குறிக்கும் கயிறு கட்டக்கூடாது என்று ஆகஸ்ட் 12-ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close