அண்ணா கருத்தை தனது பாணியில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்: அமைச்சர் செல்லூர் ராஜூ

  Newstm Desk   | Last Modified : 16 Aug, 2019 11:15 am
rajinikanth-has-commented-on-anna-s-style-minister-sellur-raju

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் அண்ணா ஏற்கனவே கூறிய கருத்தை தனது பாணியில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘ரஜினிகாந்த் கூறிய கருத்தை 1962-ஆம் ஆண்டில் அண்ணா கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்க கூடாது என்ற ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது. அவரது கருத்தை நான் ஆமோதிக்கிறேன்’ என்றார்.

மேலும், தமிழகத்தில் 59 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களில் பயிற்றுவிக்கப்படுவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close