ஊழலை தடுத்தால் பால் விலை உயர்வை தடுக்கலாம்: டிடிவி

  அனிதா   | Last Modified : 18 Aug, 2019 12:37 pm
milk-price-hike-can-be-prevented-by-preventing-of-corruption-ttv

பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்க பேட்டியளித்த அவர், "மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் மீதோ மக்கள் மீதோ எந்த ஒரு அக்கறையும் கிடையாது என்றும் தமிழகத்தின் அனைத்து வளங்களும் அளிக்கப்பட்டு கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது இருக்கின்ற ஆட்சியாளர்கள் கருப்பு பட்டியலில் இடம் பெறுவார்கள் என கூறிய டிடிவி தினகரன், விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை விவசாய நிலங்களில் செய்யாமல் யாரையும் பாதிக்காத வகையில் கடல் பகுதிகளில் மத்திய அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 

தமிழக அரசு ஆவின் பால் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும், பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம் எனவும் தெரிவித்தார். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம் தான்  என்றும் தங்கள் தொண்டர்கள் யானை பலத்துடன் இருப்பதாகவும் கூறிய டிடிவி.தினகரன் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று எங்கள் பலத்தை காட்டுவோம் என தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close