விரைவில் திமுக தனிமைப்படுத்தப்படும்: தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 18 Aug, 2019 05:43 pm
dmk-will-soon-be-isolated-tamilisai

திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீருக்கு பாகிஸ்தான் உரிமை கோருவதை திமுக ஆதரிக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பிய தமிழிசை, பால் முகவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூறிய ஸ்டாலின் தற்போது விலை உயர்வை அரசியலாக்குகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், காமராஜர் அறிவுரையை கேட்டு வளர்ந்ததாக கூறும் ஸ்டாலின் மெரினாவில் ஏன் நினைவிடம் அமைக்கவில்லை என்றும், மூப்பனார் பிரதமராவதை தடுத்தது திமுகதான்; அப்துல்கலாம் குடியரசுத்தலைவராகும் போது எதிர்த்ததும் திமுகதான் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close