மத்திய இணை அமைச்சர் பதவிக்கு சிலர் அலைகின்றனர் என்று அதிமுகவை மறைமுக விமர்சித்து பேசியுள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகன்.
சென்னை புரசைவாக்கத்தில் இன்று கருணாநிதி நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய துரைமுருகன், குடியரசுத் தலைவர், பிரதமர் பதவிகள் கிடைக்க இருந்த நிலையில் அதை மறுத்தவர் கருணாநிதி. ஆனால், சிலர் மத்திய இணை அமைச்சர் பதவிக்கு அலைகின்றனர் என அதிமுக மீது மறைமுக விமர்சனம் வைத்துள்ளார்.
மேலும் பேசிய அவர், மோடி யார் என்று கேட்டவர்கள் எங்கே சென்றார்கள் என தெரியவில்லை என்றும், எதற்கும் அஞ்சாமல் அடக்குமுறைக்கு எதிராக டெல்லியில் ஸ்டாலின் அனைவரையும் திரட்டுகின்றார் என்றும் துரைமுருகன் பேசினார்.
newstm.in