விவசாயிக்கு ஓய்வே கிடையாது: முதலமைச்சர் பழனிசாமி

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2019 04:58 pm
farmer-has-no-rest-chief-minister-palanisamy

‘நான் விவசாயி என்பதால் ஒரு விவசாயியின் கஷ்ட, நஷ்டங்களை புரிந்து கொண்டுள்ளேன்’ என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் அபிநவம் கிராமத்தில் குடிமராமத்து பணி குறித்த கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய  முதலமைச்சர் பழனிசாமி, ‘விவசாயம் என்பது எளிதல்ல; அது ஒரு கடினமான பணி; விவசாயிக்கு ஓய்வே கிடையாது. நான் விவசாயி என்பதால் ஒரு விவசாயியின் கஷ்ட, நஷ்டங்களை புரிந்து கொண்டுள்ளேன். எனது குடும்பத்தினர் பாக்கு சாகுபடி செய்துள்ளனர்; குழந்தையை காப்பது போல பயிரையும் காக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் காவிரி  நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை’ என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ‘விவசாயிகளுக்காக நிறைய நன்மைகள் செய்ய வேண்டும் என்பது ஆசை. முதல்வர் பொறுப்பு காரணமாக அனைத்து தரப்பினருக்கும் நடுநிலையுடன் திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன். வழக்கறிஞராக இருந்து நீதிபதியாவது போல விவசாயியாக இருந்து முதல்வரானது என் நிலை’ என்றார். 

மேலும், குடிமராமத்து பணிக்கு இதுவரை நான் சொந்த நிதியை கொடுத்ததில்லை. அதனால், அபிநவம் ஏரியை தூர்வார என் சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்குகிறேன் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close