ஆசிரியர் தகுதித் தேர்வு: விரைவில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2019 09:56 pm
teacher-eligibility-a-soon-to-be-announced-date-of-consultation

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கலந்தாய்விற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஜூன் 8-ஆம் தேதி  நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாள் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தேர்வு முடிவுகளை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதிப்பெண் விவரம் வரும் 22-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது; கலந்தாய்விற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். சொந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும். சிறு தவறு கூட நடக்கக்கூடாது என்றுதான் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்பட்டது’ என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close