மதுரை மாவட்டம் 2 ஆக பிரிக்கப்படுகிறதா?

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2019 10:49 pm
madurai-district-is-divided-into-2

மதுரை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கப்படுவதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருமங்கலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ‘மதுரை மாவட்டத்தை 2 ஆக பிரிக்க வேண்டிய சூழ்நிலை எதுவும் தற்போது எழவில்லை. மதுரையில் இருந்து திருமங்கலம் பிரிக்கப்படுவதாக திட்டமிட்டு தவறான தகவல் பரப்பப்படுகிறது. எனினும், குடியிருப்பு அதிகமாகும்போது எதிர்காலத்தில் மதுரை மாவட்டத்தை பிரிப்பது குறித்த பரிசீலனை செய்யப்படலாம். தற்போது மதுரையில் புதிய வட்டங்கள், கோட்டங்கள் உருவாக்குகிறோம்’ என்றார்.

மேலும், 13 தொகுதிகளை கொண்ட வேலூர் பெரிய மாவட்டமாக இருந்ததால் பிரிக்கப்பட்டது என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close