ப.சிதம்பரம் கைது: காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

  அனிதா   | Last Modified : 22 Aug, 2019 11:24 am
congress-party-protests-against-arrested-of-p-chidambaram

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம்  அந்நிய முதலீட்டை பெறுவதில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், அதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 

இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, நேற்று இரவு 10 மணியளவில் சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close