திமுக பங்கேற்காதது வருத்தமே: கராத்தே தியாகராஜன்

  Newstm Desk   | Last Modified : 22 Aug, 2019 10:33 pm
sad-for-not-participating-in-dmk-karate-thiagarajan

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் திமுக பங்கேற்காதது வருத்தமே என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பா.சிதம்பரம் கைது செய்யப்பட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு போராடிய 40 பேர் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் நகர காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், ப.சிதம்பரம் கைதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் திமுக பங்கேற்காதது வருத்தமே என்றும், காங்கிரஸ் ஆதரவு இருந்ததால் தான் 38 இடங்களை திமுகவால் வெல்ல முடிந்தது எனவும் காரத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சிதம்பரம் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close