விவசாயிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் 

  Newstm Desk   | Last Modified : 23 Aug, 2019 04:32 pm
chief-minister-palanisamy-appeal-to-farmers


வேளாண் பெருமக்கள் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு முறையினை மேற்கொள்ள வேண்டும் என்று, விவசாயிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், நெல் ரகங்களின் விதைகள் போதுமான அளவில் இருப்பில் வைக்க வேளாண்மைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நேரடி நெல் விதைப்பு சாகுபடியினை ஊக்குவிக்க, ஏக்கருக்கு ரூ.600 வீதம் உழவு மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மானியம் வழங்குவதற்காக தமிழக அரசு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேற்கண்ட உழவு மானியத்தை பெற்று, நீரை சேமித்து, அதிக விளைச்சல் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close