தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்திற்கு 1500 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவரும், முன்னாள் நடிகருமான விஜயகாந்த்தின் 67வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்டங்களில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ராமநாதபுரம் எம்.ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு விஜயகாந்த் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் தேமுதிக சார்பில், சென்னை உட்பட தமிழகத்திற்கு 1500 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உடனிருந்தார்.
newstm.in