மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை உள்ளது: ஜெயக்குமார்

  அனிதா   | Last Modified : 28 Aug, 2019 12:17 pm
people-have-confidence-in-the-state-govt-jayakumar

மக்களுக்கு தமிழக அரசின் மீது நம்பிக்கை இருப்பதாகவும், அதனால் தான் சிறப்பு குறைத்தீர்ப்பு திட்டத்தில் அதிக மனுக்களை அளிப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், " வெளிநாடு சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்துள்ளதாகவும், முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் செல்லாததை வைத்து சிலர் கதை கட்ட முயல்வதாகவும் கூறினார். 

முதலமைச்சரும், முதலமைச்சர் துணை முதலமைச்சர் இணைந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வரவுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,  மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை உள்ளதாகவும், அதனால் தான் முதலமைச்சர் சிறப்பு குறை தீர்ப்பு திட்டத்தில் அதிக மனுக்களை அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

தான் சம்பாதித்த சொத்துக்களை வெளிநாட்டில் முதலீடு செய்யவே திமுகவினர் வெளிநாடு செல்கின்றனர் என் குற்றம்சாட்டிய அவர், முதலீட்டாளர்களை சந்திக்க செல்லும் முதலமைச்சர் மீது குறை கூறுபவர்களின் பார்வையில் தான் குறை உள்ளது என கூறினார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close