பொருளாதாரம் மந்த நிலையை மறைக்கவே காஷ்மீர் பிரச்சனையை பாஜக அரங்கேற்றியுள்ளது - கே.எஸ்.அழகிரி

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2019 09:52 pm
ks-alagiri-press-meet

பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதை மூடி மறைக்கவே காஷ்மீர் பிரச்சனையை பாஜக அரங்கேற்றியுள்ளது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மத்திய பாஜக அரசின் கொள்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார். காஷ்மீர் மாநிலம் குறித்து பாஜக அரசு எடுத்துள்ள முடிவை கண்டித்தும், தற்போதைய இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதையும் தொடர்ந்து கண்டித்து வருகிறோம். பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதை மூடி மறைக்கவே காஷ்மீர் பிரச்சனையை பாஜக அரங்கேற்றியுள்ளது" என்று தெரிவித்தார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close