புதுச்சேரியிலும் பால் விலை உயர்வு: நாளை முதல் அமல்

  Newstm Desk   | Last Modified : 29 Aug, 2019 11:57 am
puducherry-milk-price-hike-effective-from-tomorrow

புதுச்சேரி அரசின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 6 ரூபாயும், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.30 லிருந்து ரூ.34 ஆக உயர்த்தியுள்ளதாகவும், கொள்முதல் விலை அதிகரிப்பால் புதுச்சேரியில் 40 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை அரசு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2014-க்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து புதுச்சேரியில் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பால் விலை உயர்வு விவரம்:

* சமன்படுத்திய பாண்லே பால் விலை லிட்டருக்கு ரூ.36லிருந்து ரூ.42 ஆக உயர்வு.

* சிறப்பு சமன்படுத்திய பால் விலை லிட்டருக்கு ரூ.38லிருந்து ரூ.44 ஆக உயர்வு.

* நிலைப்படுத்திய பால் விலை லிட்டருக்கு ரூ.42 லிருந்து ரூ.48 ஆக உயர்வு.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close