ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைதியாகிவிட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழர் என அழைக்கப்படும் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள வ.உ சிதம்பரனாரின் திருவுருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைதியாகி விட்டதாகவும், அடுத்து கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் இப்போதெல்லாம் மத்திய அரசை கடுமையாக விமர்சிப்பதில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஒரே ரேசன் கார்டு திட்டம் மூலம் தமிழக அரசு வழங்கி வரும் இலவச அரிசி திட்டம் பாதிக்காது எனவும், மக்கள் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Newstm.in