தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை இன்று பதவியேற்பு

  Newstm Desk   | Last Modified : 08 Sep, 2019 09:13 am
tamilisai-today-sworn-in-as-the-governor-of-telangana

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் இன்று பதவியேற்றுக் கொள்கிறார்.

ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தெலங்கானா மாநில தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான், தமிழிசைக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

தமிழுக்கும், தெலுங்கிற்கும் பாலமாக செயல்படுவேன் என்றும், தமிழ்மகளாக தெலங்கானா ஆளுநர் பதவியை ஏற்கப்போகிறேன்; மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பாக கருதுகிறேன் என்றும் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close