370ஐ நீக்குவது ஜனசங்க காலம் முதல் எங்களது கொள்கையாக இருந்து வந்தது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2019 05:02 pm
the-removal-of-the-370-has-been-our-policy-since-the-jana-sabha-union-minister-nirmala-sitharaman

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் 370ஐ நீக்குவது ஜனசங்க காலம் முதல் எங்களது கொள்கையாக இருந்து வந்தது தான் என்று, சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.

கிண்டியில் அமைச்சர் அளித்த பேட்டியில் மேலும், ‘சட்டப்பிரிவு 370 ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்கு உபயோகமாக இல்லை. அந்த சட்டப்பிரிவை நீக்குவது என்பது தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் கூறியதுதான். இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி ரூபாயாக உயர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மோட்டார் வாகன உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து ஆலோசித்தோம்; பல காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது’ என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close