என் உயிர் உள்ளவரை அதிமுகவில் தான் இருப்பேன்; எம்.ஆர்.விஜயபாஸ்கர்

  அனிதா   | Last Modified : 11 Sep, 2019 01:29 pm
minister-vijayabasker-speech

என் உயிர் உள்ளவரை அதிமுகவில் தான் இருப்பேன் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், என் உயிர் உள்ளவரை முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தான் இருப்பேன் என்றும், திமுகவில் இணையுமாறு அழைத்த அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இதுதான் எனது பதில் எனவும் கூறினார். கரூரில் 7.2 கோடி செலவில் 434 சிறு குளங்கள் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக குளங்களை தூர்வாருவது போல திமுகவினர் நடிப்பதாக குற்றம் சாட்டிய அவர், தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி 3 சென்ட் நிலத்தை முதலில் வழங்கட்டும் என கூறினார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close