அதிமுக ஆட்சியை குறித்து விமர்சிக்க ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: முதலமைச்சர் பழனிசாமி

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2019 08:19 pm
stalin-does-not-deserve-to-criticize-aiadmk-rule-chief-minister-palanisamy

திமுக ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிட்டார்கள்? என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது அனைத்தும் பொய் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் அளித்த பேட்டியில் மேலும், ‘திமுக ஆட்சியில் தொழில் மூதலீடு ரூ.26 ஆயிரம் கோடி தான்; அதிமுக ஆட்சியில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் வாழ் தமிழ் சொந்தங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல தொழிலதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநிலத்தை முன்னேற்றி வருகிறார்கள். தமிழகத்தில் அதிமுக அரசு செய்து வரும் வளர்ச்சி திட்டங்களை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஸ்டாலின் குறுகிய எண்ணம் படைத்தவர்’ என்று முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து முதலமைச்சர் அளித்த பேட்டியில், ‘எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே பாராட்டுக்குரியதுதான். திமுக ஆட்சியின்போது எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன?. ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவித்தது ஸ்டாலினுக்கு தெரியாதா?. காவிரி முதல் கொள்ளிடம் வரை மேலும் 3 தடுப்பணைகள் கட்ட ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அரசு எப்படி செயல்படுகிறது என்பது ஸ்டாலினுக்கு தெரியாது; அவருக்கு அதில் ஈடுபாடும் இல்லை. அதிமுக ஆட்சியை குறித்து விமர்சிக்க ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. நாட்டைப் பற்றியே கவலைப்படாத கட்சி திமுகதான்’ என்று முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், உலக நாடுகளுக்கு சென்று பார்வையிட்டால்தான் தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியும்; முதலீட்டாளர்களுக்கு நேரில் சென்று தெளிவுபடுத்தினால் தான் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள் என்ற முதலமைச்சர், மோட்டார் வாகனச் சட்டம் கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் தடுக்கப்படும்; மோட்டார் வாகனச் சட்டத்தை பரிசீலனை செய்து முறையாக அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close